
பிபா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வெற்றி; வரலாறு படைத்த பிலிப்பைன்ஸ்
செய்தி முன்னோட்டம்
செவ்வாயன்று (ஜூலை 25) நடைபெற்ற பிபா மகளிர் உலகக்கோப்பை குரூப் ஏ போட்டியில் பிலிப்பைன்ஸ் கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் அணியின் முன்கள வீராங்கனையான சரினா போல்டன் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
மேலும், இதன் மூலம் பிபா உலகக்கோப்பை போட்டி வரலாற்றில் முதல் வெற்றியை பிலிப்பைன்ஸ் அணி பதிவு செய்துள்ளது.
முன்னதாக, தனது முதல் போட்டியில் நார்வேயை வீழ்த்திய நியூசிலாந்து, இதில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் நம்பிக்கையில் இருந்தது.
எனினும், தனது தொடக்க ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பிலிப்பைன்ஸ், நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெற்றது.
ட்விட்டர் அஞ்சல்
பிலிப்பைன்ஸ் மகளிர் கால்பந்து அணி வெற்றி
𝗙𝗨𝗟𝗟 𝗧𝗜𝗠𝗘: #FIFAWWWC HISTORY FOR THE FILIPINAS!!!!!!!!!
— Philippine WNT ⚽ (@PilipinasWNFT) July 25, 2023
🇳🇿 0-1 🇵🇭
🔵🔴🟡 #LabanFilipinas #ParaSaBayan #WinTheMoment #FilipinasTayo #FWWC2023 #NZLvPHI pic.twitter.com/PLUuirHDgh