Loading...
சாண்ட்பேப்பர் சர்ச்சை மீண்டும் வெடித்தது: உஸ்மான் கவாஜாவின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்
உஸ்மான் கவாஜாவின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்

சாண்ட்பேப்பர் சர்ச்சை மீண்டும் வெடித்தது: உஸ்மான் கவாஜாவின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2026
07:20 am

செய்தி முன்னோட்டம்

கடந்த 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியின்போது நடைபெற்ற பந்து சேதப்படுத்தப்பட்ட சர்ச்சை குறித்து சக வீரர் உஸ்மான் கவாஜா முன்வைத்த அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் முற்றிலுமாக மறுத்துள்ளார். தனது புத்தகத்தில் 2018 'சாண்ட்பேப்பர்' விவகாரம் குறித்து எழுதியுள்ள உஸ்மான் கவாஜா, பந்து சேதப்படுத்தப்பட்டது ஒட்டுமொத்த அணிக்கும் முன்கூட்டியே தெரியும் எனக் கூறியிருந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 2018-ஆம் ஆண்டு கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் கேமரூன் பான்கிராஃப்ட் சாண்ட்பேப்பர் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். இதையடுத்து அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பொறுப்பேற்று தடை விதிக்கப்பட்டனர்.

உஸ்மான் கவாஜா

உஸ்மான் கவாஜாவின் புத்தகத்தில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள்

அப்போது பந்துவீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் தங்களுக்கு இதில் தொடர்பில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், தனது புத்தகத்தில் உஸ்மான் கவாஜா குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் பந்துவீச்சாளர்கள் மீது மீண்டும் சந்தேகப் பார்வையைத் திருப்பியுள்ளன/

சாண்ட்பேப்பர் பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு கேமரூன் பான்கிராஃப்டிடம் தானே கூறியதாக கவாஜா ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், பந்து சேதப்படுத்தும் திட்டம் ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும் என்றும், கம்மின்ஸ் உள்ளிட்டோரே இந்தத் திட்டத்தின் மூளையாக செயல்பட்டார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உஸ்மான் கவாஜாவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்கள் வாயிலாக பதிலளித்த பாட் கம்மின்ஸ், தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பாட் கம்மின்ஸ்

"இது முற்றிலும் அபத்தமானது"

"சாண்ட்பேப்பர் பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு கேமரூனிடம் கூறியதாக உஸ்மான் ஒப்புக்கொண்டதைக் கேட்டு நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன்"

"மைதானத்திற்குள் சாண்ட்பேப்பர் கொண்டு செல்லப்பட்டது எங்கள் அனைவருக்கும் தெரியும் என அவர் கூறுவது 100 சதவீதம் தவறானது. கடந்த 8 ஆண்டுகளாக நான் தொடர்ந்து கூறி வருவது போல, அப்படி ஒரு சம்பவம் நடப்பது எனக்குத் தெரியவே தெரியாது."

"நானும் மற்றவர்களும் சேர்ந்துதான் பந்து சேதப்படுத்தும் திட்டத்தை வடிவமைத்தோம் என உஸ்மான் கூறுவது முற்றிலும் அபத்தமானது. உஸ்மான் எனது நண்பர்தான்; ஆனால் நண்பர்கள் ஒருவரின் வாழ்க்கையையும் நற்பெயரையும் இவ்வளவு அலட்சியமாகக் கையாள மாட்டார்கள். தனது கதையைச் சொல்ல அவருக்கு உரிமை உண்டு, ஆனால் நாம் பேசும் வார்த்தைகளுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும்" எனக் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT