LOADING...
டி20 உலகக்கோப்பை 2026: போட்டியிலிருந்து வெளியேறியது இலங்கை; பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு என்னவாகும்?
நியூசிலாந்தின் அபார வெற்றி, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவை நூலிழையில் தொங்கவிட்டுள்ளது

டி20 உலகக்கோப்பை 2026: போட்டியிலிருந்து வெளியேறியது இலங்கை; பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு என்னவாகும்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2026
08:46 am

செய்தி முன்னோட்டம்

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில், இலங்கை அணிக்கு எதிரான நியூசிலாந்தின் அபார வெற்றி, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவை நூலிழையில் தொங்கவிட்டுள்ளது. பிப்ரவரி 25 அன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம், அவர்களது நிகர ரன் ரேட் (NRR) +3.050 ஆக உயர்ந்துள்ளது. குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ள நிலையில், இரண்டாவது இடத்தை பிடிக்க நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது -0.461 ரன் ரேட் கொண்டுள்ள சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, தனது கடைசி சூப்பர் 8 போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது.

நிபந்தனை

பாகிஸ்தான் தகுதி பெற வேண்டிய நிபந்தனைகள்

பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில், முதலில் பிப்ரவரி 27 அன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும். ஒருவேளை இப்போட்டி மழையினால் ரத்தானால், நியூசிலாந்து நேரடியாக தகுதி பெற்றுவிடும். இங்கிலாந்து வெற்றிபெறும் பட்சத்தில், பாகிஸ்தானுக்கு கீழ்க்கண்ட வாய்ப்புகள் அமையும்: இங்கிலாந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால், பாகிஸ்தான், இலங்கையை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் சுமார் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் முன்னேற முடியும். இலங்கை முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான் அதனை 14 ஓவர்களுக்குள் கடக்க வேண்டும்.

Advertisement