LOADING...
'கைகுலுக்காம போய்ட்டாங்க'; ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் புகார்

'கைகுலுக்காம போய்ட்டாங்க'; ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 15, 2025
10:40 am

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர், இந்திய வீரர்கள் தங்களுடன் கைகுலுக்க மறுத்ததாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது. இந்த மோதல் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின்போது, இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு நடந்தது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே உள்ளிட்ட வீரர்கள், போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் மைதானத்திலிருந்து வெளியேறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது விளையாட்டுக்கு விரோதமான நடத்தை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மேலாளர் நவீத் சீமா தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவிற்குப் பாகிஸ்தான் கேப்டன் செல்லவில்லை.

பஹல்காம்

பஹல்காம் பயங்கரவாத சம்பவம்

சமீபத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்தன. இந்தச் சூழலில், இந்திய அணி இந்தப் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வீழ்த்தி, தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. போட்டியின் வெற்றிக்குப் பிறகு, பேசிய சூர்யகுமார் யாதவ், இந்திய அணி பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்பதாகவும், இந்த வெற்றியை இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார். "அவர்களின் வீரத்திற்கு இந்த வெற்றியை நாங்கள் அர்ப்பணிக்க விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.