இதே நாளில் அன்று : டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து கிறிஸ் கெயில் சாதனை
செய்தி முன்னோட்டம்
குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டியான டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எனும் இமாலய மைல்ஸ்டோனை மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் கடந்த தினம் இன்று.
டி20 போட்டிகளுக்கு வரவேற்பு கிடைக்கும் முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் விளையாடி வந்தாலும், டி20 கிரிக்கெட்டே அவருக்கு மிகப்பெரும் பிரபலத்தை தேடித் தந்தது.
இந்த வடிவம் கெய்லின் ஆக்ரோஷமான விளையாட்டு பாணிக்கு ஏற்றது மற்றும் அவர் விரைவில் டி20 கிரிக்கெட்டின் "யுனிவர்சல் பாஸ்" ஆக மாறினார்.
மேலும் 2017 ஆம் ஆண்டு இதே நாளில் (ஏப்ரல் 18) கெய்ல் டி20 போட்டிகளில் இதற்கு முன் வேறு எந்த பேட்டரும் செய்யாத சாதனையை செய்தார்.
Chris gayle surpass 10000 runs in t20 cricket
10,000 ரன்களை கடந்த கிறிஸ் கெயில்
இதே நாளில் ஐபிஎல் 2017 இன் போது தற்போது செயல்படாத குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) போட்டியில் தனது 285வது டி20 இன்னிங்ஸில் விளையாடிய கெய்ல், 10,000 ரன் மைல்கல்லை எட்டினார்.
10,000 ரன்களை முடிக்க அவருக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், போட்டியின் நான்காவது ஓவரில்அதை எட்டினார்.
ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் 463 போட்டிகளில் விளையாடி 14,562 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது அதிகபட்ச ஸ்கோர் 175 (நாட் அவுட்) ஆகும்.
கிரிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக சோயப் மாலிக், கீரன் பொல்லார்டு, விராட் கோலி, டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், ரோஹித் சர்மா ஆகியோர் 10,000 ரன்களை கடந்துள்ளனர்.