NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 40 வருட கபில் தேவ்-சையது கிர்மானி ஜோடியின் சாதனையை முறியடித்த நெதர்லாந்து வீரர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    40 வருட கபில் தேவ்-சையது கிர்மானி ஜோடியின் சாதனையை முறியடித்த நெதர்லாந்து வீரர்கள்
    40 வருட கபில் தேவ்-சையது கிர்மானி ஜோடியின் சாதனையை முறியடித்த நெதர்லாந்து வீரர்கள்

    40 வருட கபில் தேவ்-சையது கிர்மானி ஜோடியின் சாதனையை முறியடித்த நெதர்லாந்து வீரர்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 21, 2023
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    லக்னோவில் சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெறும் 2023 ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பையின் 19வது லீக் போட்டியில் இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து 262 ரன்களை குவித்தது.

    இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் 7வது விக்கெட்டுக்கு சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் லோகன் வான் பீக் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர்.

    சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 70 ரன்களும், லோகன் வான் பீக் 59 ரன்களும் எடுத்து இருவரும் அரைசதம் கடந்தனர்.

    மேலும் இருவரும் 7வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் அயர்லாந்து 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும், 262 ரன்கள் சேர்த்தது.

    Netherlands Players registers record in ODI World Cup

    ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் ஏழாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்

    ஏங்கல்பிரெக்ட் மற்றும் வான் பீக் ஜோடி இனைந்து ஏழாவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்ததன் மூலம், இப்போது உலகக்கோப்பை வரலாற்றில் ஏழாவது அல்லது அதற்கும் கீழான விக்கெட்டுக்கான அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.

    முன்னதாக, 40 ஆண்டுகளுக்கு முன்பு, 1983இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 126 ரன்கள் சேர்த்த இந்தியாவின் கபில்தேவ் மற்றும் சையத் கிர்மானி ஆகியோர் இந்த சாதனையை தங்கள் வசம் வைத்திருந்தனர்.

    இதற்கிடையே, உலகக்கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக, நெதர்லாந்து ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு அல்லது அதற்கு கீழே சதத்தை சேர்த்த ஏழாவது ஜோடி ஆனது.

    மேலும் ஏங்கல்பிரெக்ட் 81 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 70 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஒருநாள் உலகக்கோப்பை

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    கிரிக்கெட்

    'ரோஹித் ஷர்மாவுக்கு ஈவு இரக்கமே இல்ல, கப்பு இந்தியாவுக்குத்தான்' : முன்னாள் பாக். வீரர் புகழாரம் ஒருநாள் உலகக்கோப்பை
    ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsPAK : டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை ஒருநாள் உலகக்கோப்பை
    ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    BANvsNZ : நியூசிலாந்து அபார வெற்றி; மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; இந்திய கால்பந்து அணி தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் கிரிக்கெட்
    இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் அலஸ்டைர் குக் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    INDvsPAK : அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு இடமில்லை? இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 அஸ்வின் ரவிச்சந்திரன்

    ஒருநாள் உலகக்கோப்பை

    ஒரு மாத காலத்தில் 4 விளையாட்டுகளில் பாகிஸ்தானை துவம்சம் செய்து அசத்திய இந்தியா இந்தியா vs பாகிஸ்தான்
    'எல்லை மீறி போறீங்க, ஏத்துக்க முடியாது' : ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் உதயநிதி ஸ்டாலின்
    ENGvsAFG : இங்கிலாந்தை வாரிச் சுருட்டிய ஆப்கானிஸ்தான்; 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ஆப்கான் கிரிக்கெட் அணி
    Sports Round Up : 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு ரோஹன் போபண்ணா தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள் ரோஹன் போபண்ணா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025