அடுத்த செய்திக் கட்டுரை

'நக்கல்'யா உனக்கு' : நவீன்-உல்-ஹக்கை விளாசும் ஆர்சிபி ரசிகர்கள்! காரணம் இது தான்!
எழுதியவர்
Sekar Chinnappan
May 22, 2023
07:21 pm
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது கடைசி லீக் கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி பிளேஆப் வாய்ப்பை இழந்தது.
பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான போட்டியில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸின் தோல்வியை அடுத்து, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு ஆப்பிரிக்க தொகுப்பாளர் சிரிக்கும் ஒரு மீம் வீடியோவை வெளியிட்டார்.
இது ஆர்சிபியை நக்கலடிக்கும் வகையில் இருந்ததால், ஆர்சிபி ரசிகர்கள் கொந்தளித்துப் போய் நவீன்-உல்-ஹக்கை சமூக வலைத்தளங்களில் காரசாரமாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
naveen ul haq has taken it too far now pic.twitter.com/A8bQZC0Sdf
— Kanupriya (@kanupriiya) May 21, 2023