எம்எஸ் தோனிக்கும், ஃபில்டர் காபிக்கும், இடையேயான காதல்! இது தெரியுமா உங்களுக்கு?
கிரிக்கெட்டில் யாரும் எட்டாத உயரங்களை தொட்டு கேப்டனாக பல சாதனைகள் செய்திருந்தாலும், எந்தவித பந்தாவும் இல்லாமல் எம்எஸ் தோனி குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் தன்னடக்கத்துடன் எளிதில் அனைவரும் அணுகக் கூடியவராகவும் இருந்து வருகிறார். தோனியின் இந்த பண்பு அவரை ரசிகர்களிடம் மேலும் நெருக்கமாக ஆக்குகிறது மற்றும் கிரிக்கெட் உலகின் எல்லைகளுக்கு அப்பால் பரவலான பாராட்டுகளைப் பெறுகிறது. ஐபிஎல்லில் 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் எம்எஸ் தோனிக்கு காபி மீதான அவரது காதல்தான். அதிலும் சென்னை கிரவுன் பிளாசா, அடையாறு பூங்காவில் கிடைக்கும் ஃபில்டர் காபி அவருக்கு விருப்பமான ஒன்றாகும்.
ஃபில்டர் காபியுடன் எம்எஸ் தோனியின் உறவு
சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் விளையாடும் போதெல்லாம் சென்னையில் உள்ள கிரவுன் பிளாசா அடையாறு பூங்காவில் தங்குவது வழக்கம். தோனியும் அவரது அணியினரும் அங்கு அமைந்துள்ள தென்னிந்திய உணவகமான தக்ஷினில் எம்.டி.சுரேஷ் தயாரித்த காபியின் மீது மிகுந்த விருப்பம் கொண்டிருந்தனர். 2008 இல் தோனி வந்தபோது, சுரேஷ் தயாரித்த தென்னிந்திய ஃபில்டர் காபியில் ஈர்க்கப்பட்டு இருவருக்கும் இடையே வாடிக்கையாளர்-சர்வர் என்பதை தாண்டி ஒரு ஆழமான பிணைப்பு ஏற்பட்டது. இந்த ஃபில்டர் காபி தோனி மட்டுமல்லாது ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய் போன்ற மற்ற வீரர்களையும் ஈர்த்தது. சிஎஸ்கே இந்தமுறை கிரவுன் பிளாசாவில் தங்காததால் சுரேஷின் ஃபில்டர் காபி சுவையை இழந்தாலும், அது எப்போதும் சிஎஸ்கேவின் பாரம்பரியங்களில் ஒன்றாக இருக்கும்.