RCBக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் எம்எஸ் தோனி
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி. 2024 ஐபிஎல் சீசனின் 68வது போட்டி நேற்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கேவுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியின் போது தோனி இந்த சாதனையை நிகழ்த்தினார். தோனி 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து சிஎஸ்கேவின் மொத்த ரன்களை 192.31ஆக உயர்தினார். ஆனால், சிஎஸ்கே ஆர்சிபியை தோற்கடிக்கத் தவறியது.
டேவிட் வார்னரை முந்தினார் தோனி
தோனி தற்போது ஆர்சிபிக்கு எதிராக அதிக ஐபிஎல் ரன்களை எடுத்துள்ளார். அவர் டேவிட் வார்னரை பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை எட்டினார். டேவிட் வார்னர் ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிராக 23 போட்டிகளில் 41.04 சராசரியில் 862 ரன்கள் எடுத்துள்ளார். தோனி, வார்னர் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய மூவர் மட்டுமே RCBக்கு எதிரான போட்டிகளில் 800 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் 27.70 சராசரியில் 831 ரன்கள் எடுத்துள்ளார். தோனி இதுவரை ஆர்சிபிக்கு எதிரான போட்டிகளில் 39.27 சராசரியில் 864 ரன்களை எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் நான்கு அரைசதங்களும் அடங்கும்.