சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட முகமது ஷமி; வைரலாகும் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நைனிடாலில் சாலை விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு, சம்பவத்தின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். முகமது ஷமி இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதைக் காணலாம். அந்த பதிவில், "அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி, கடவுள் அவருக்கு 2வது வாழ்க்கையை கொடுத்தார். அவரது கார் நைனிடால் அருகே மலைப்பாதையில் இருந்து எனது காருக்கு முன்னால் கீழே விழுந்தது. நாங்கள் அவரை மிகவும் பாதுகாப்பாக வெளியே எடுத்தோம்." என்று முகமது ஷமி பதிவிட்டுள்ளார். முன்னதாக, சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பைதொடரில் அபாரமாக விளையாடி முகமது ஷமி அதிக விக்கெட் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.