Loading...
பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுடன் முகமது ஷமி திடீர் சந்திப்பு: அரசியலில் குதிக்கிறாரா இந்திய வேகப்பந்து வீச்சாளர்
பாஜக தேசிய தலைவர் நிதின் நபீனை கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சந்தித்தார்.

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுடன் முகமது ஷமி திடீர் சந்திப்பு: அரசியலில் குதிக்கிறாரா இந்திய வேகப்பந்து வீச்சாளர்

எழுதியவர் Vasuki
Nov 29, 2026
05:11 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை புதுடெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சந்தித்துப் பேசினார். பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவர் குன்வர் பாசித் அலியும் உடனிருந்த இச்சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகாத நிலையில், ஷமி விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாகப் பலத்த யூகங்கள் கிளம்பியுள்ளன. சக இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பாஜகவில் இணைந்து அக்கட்சியின் ஓபிசி அணியின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டு ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், ஷமியின் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஷமியின் கிரிக்கெட் பயணம்

முன்னதாக ஜெயந்த் சவுத்ரியுடன் சந்திப்பு

அரசியல் தலைவர்களை முகமது ஷமி சந்திப்பது இது முதல் முறையல்ல, கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் சவுத்ரியை அவர் சந்தித்தபோதும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிப் பல ஊகங்கள் எழுந்தன.

ஆனால், அம்ரோஹாவில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிக்கவே ஷமி சென்றதாக அப்போது விளக்கமளிக்கப்பட்டது.

36 வயதான ஷமி, கடந்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியோடு டெஸ்ட் போட்டிகளில் ஆடாத நிலையில், 64 போட்டிகளில் 229 விக்கெட்டுகளுடன் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது ஒருநாள், டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல்-லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ADVERTISEMENT