
மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். அரையிறுதிக்கு முன்னேற்றம்!
செய்தி முன்னோட்டம்
மலேசியா மாஸ்டர்ஸ் காலிறுதியில் வெள்ளிக்கிழமை (மே 26) இந்திய வீராங்கனை பிவி சிந்து, சீனாவின் ஜாங் யி மானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைத்தார்.
21-16, 13-21, 22-20 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை ஜாங் யி மானை தோற்கடித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆல் இங்கிலாந்து ஓபனில் ஜாங்கிடம் பெற்ற தோல்விக்கு பழிவாங்கினார்.
அவர் சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொள்கிறார்.
இதற்கிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் எச்.எஸ். ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோற்று வெளியேறியுள்ளார்.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான தகுதிச் சுழற்சியின் முதல் நிகழ்வு மலேசியா மாஸ்டர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Thrilling win for Sindhu and she moves into the Semi Finals 🥳
— BAI Media (@BAI_Media) May 26, 2023
📸: @badmintonphoto#MalaysiaMasters2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/aKzvFvxsDu