மாட்ரிட் ஓபன் 2023 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய பிரபல வீராங்கனை
முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான எம்மா ரடுகானு மாட்ரிட் ஓபன் டென்னிஸின் தனது முதல் போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 26) முதல் சுற்றில் விக்டோரியா டோமோவாவுடன் விளையாடுவதற்கு சற்று முன்பு விலகினார். 20 வயதான பிரிட்டிஷ் வீராங்கனை எம்மா ரடுகானு தனது வலது கையில் ஏற்பட்ட காயம் தான் விலகுவதற்கான காரணம் என்று கூறியுள்ளார். 2021 இல் ஃப்ளஷிங் மெடோஸில் 18 வயது தகுதிப் போட்டியில் பட்டத்தை வென்றதில் இருந்து ஃபார்ம் மற்றும் உடற்தகுதிக்காக போராடிய ராடுகானுவுக்கு இது சமீபத்திய பின்னடைவாகும். முன்னதாக அவர் மியாமி மற்றும் ஸ்டட்கார்ட்டில் முதல் சுற்றில் தோற்று வெளியேறியிருந்தார். மேலும் தற்போது மாட்ரிட்டை தவறவிட்டதன் மூலம் டபிள்யுடிஏ தரவரிசையில் முதல் 100 இடங்களிலிருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.