Page Loader
மாட்ரிட் மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து ரஃபேல் நடால் விலகல்
மாட்ரிட் மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து ரஃபேல் நடால் விலகல்

மாட்ரிட் மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து ரஃபேல் நடால் விலகல்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 20, 2023
04:58 pm

செய்தி முன்னோட்டம்

மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ரஃபேல் நடால் வியாழக்கிழமை (ஏப்ரல் 20) அறிவித்தார். இது தொடர்பாக ரஃபேல் நடால் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், "ஆரம்பத்தில் ஆறு முதல் எட்டு வாரங்களில் மீண்டு வருவேன் என நினைத்தேன். இப்போது பதினான்கு வாரங்களை கடந்துள்ளேன்." என்று கூறியுள்ளார். முன்னதாக நடால், இடது இடுப்பு காயம் காரணமாக, ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விளையாடவில்லை. இதன் மூலம் 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ஏடிபி டாப் 10இல் இருந்து வெளியேறினார். மாட்ரிட் மாஸ்டர்ஸ் போட்டி வரும் ஏப்ரல் 27 அன்று தொடங்குகிறது. நடால் மாட்ரிட் மாஸ்டர்ஸ் போட்டியில் அதிகபட்சமாக ஐந்து பட்டங்களுடன் மிகவும் வெற்றிகரமான வீரராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ரஃபேல் நடால் விலகல்