Page Loader
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் முக்கிய பொறுப்பில் இணைந்த முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் திட்ட ஆலோசகராக எம்எஸ்கே பிரசாத் நியமனம்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் முக்கிய பொறுப்பில் இணைந்த முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 17, 2023
07:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், ஐபிஎல் 2024க்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியில் திட்ட ஆலோசகராக சேர்ந்துள்ளார். அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கரை எல்எஸ்ஜி அணி கடந்த ஜூலையில் நியமித்த பிறகு, இது மிகப்பெரிய நியமனமாக பார்க்கப்படுகிறது. 2022 சீசனில் ஐபிஎல்லில் அறிமுகமான எல்எஸ்ஜி, இதுவரை பங்கேற்ற இரண்டு சீசன்களிலும் டாப் 4 இடத்திற்கு முன்னேறினாலும், இறுதிப்போட்டிக்கு சென்று பட்டம் வெல்ல முடியவில்லை. இந்நிலையில், எம்எஸ்கே பிரசாத்தின் அனுபவம் ஜஸ்டின் லாங்கர் மற்றும் கவுதம் காம்பிருடன் சேர்ந்து 2024 சீசனில் அணிக்கு முதல் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் என்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் நம்புகிறது.

ட்விட்டர் அஞ்சல்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் திட்ட ஆலோசகராக எம்எஸ்கே பிரசாத் நியமனம்