ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான மஸ்கட்டாக இடம்பெற்ற 'அனுமன்'
புதன்கிழமை (ஜூலை 12) தாய்லாந்தின் பாங்காக்கில் தொடங்கும் தடகள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு, இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவரான அனுமன், அதிகாரப்பூர்வ மஸ்கட்டாக இருப்பார். தடகள போட்டிக்கான ஆசிய ஆட்சிக் குழு நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட உள்ளது. ஆசிய தடகள சங்கம் மஸ்கட்டை வெளியிட்டு, வேகம், வலிமை, தைரியம் மற்றும் ஞானத்தின் அடையாளமாக உள்ள அனுமனின் மிகப்பெரிய திறமை, உண்மையில், அவரது நம்பமுடியாத உறுதியான விசுவாசம் மற்றும் பக்தி எனத் தெரிவித்துள்ளது. இதில் பங்கேற்க இந்திய அணி, சனிக்கிழமை (ஜூலை 8) டெல்லி மற்றும் பெங்களூரில் இருந்து புறப்பட்டது. இந்திய அணியில் ஸ்ரீசங்கர், தேஜிந்தர்பால், ஜோதி யர்ராஜி உட்பட 49 தடகள வீரர்கள் உள்ளனர்.