Page Loader
வங்கதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!
வங்கதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

வங்கதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 05, 2023
11:36 am

செய்தி முன்னோட்டம்

டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு லிட்டன் தாஸ் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) லிட்டன் தாஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை வங்கதேச அணி அறிவித்துள்ளது. முன்னதாக, முந்தைய அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் விரலில் காயம் ஏற்பட்டதால் அவர் ஓய்வில் இருக்கும் நிலையில் லிட்டன் தாஸுக்கு அணியை வழிநடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

bangaladesh squad for afghan

வங்கதேச அணி வீரர்களின் பட்டியல் அறிவிப்பு

இந்த வாய்ப்பு மூலம் ஆடவருக்கான டெஸ்டில் வங்கதேசத்தை வழிநடத்தும் 12வது வீரர் என்ற பெருமையை லிட்டன் தாஸ் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லிட்டன் தாஸ் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் வங்கதேசத்தை வழிநடத்தும் ஐந்தாவது வீரர் ஆவார். ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி : லிட்டன் தாஸ் (கேப்டன்), தமிம் இக்பால், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மொமினுல் ஹக் ஷோராப், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், சையத் கலீத் அகமது, எபடோட் ஹொசைன் சவுத்ரி, மஹ்முதுல் ஏ இஸ்லாம், மஹ்முதுல் ஏ இஸ்லாம் , ஷஹாதத் ஹொசைன் திபு, முஷ்பிக் ஹசன்.