விசா இல்லாததால் சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஜூன் 10 அன்று சீனாவின் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நட்பு போட்டியில் விளையாட மெஸ்ஸி சீனாவுக்கு வந்தபோது, சீன எல்லைக் காவல்துறை அவரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியது. தனது அர்ஜென்டினா பாஸ்போர்ட்டுக்கு பதிலாக சீன விசா இல்லாத ஸ்பெயின் பாஸ்போர்ட்டுடன் பயணித்ததால், மெஸ்ஸியின் விசா தாமதமாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த பிரச்சினை சுமார் 30 நிமிடங்களில் தீர்க்கப்பட்டதை அடுத்து மெஸ்ஸி விமான நிலையத்திலிருந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவுடன் நட்பு போட்டிகளில் மோதும் அர்ஜென்டினா
அர்ஜென்டினா தேசிய அணி வியாழன் (ஜூன் 15) அன்று ஆஸ்திரேலியுடன் நட்பு போட்டியில் பெய்ஜிங்கில் விளையாட உள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு சீனாவில் மெஸ்ஸி விளையாட வருவதால் சீன கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்ற பிறகு ஜூன் 19 ஆம் தேதி இந்தோனேஷியாவை அர்ஜென்டினாவில் எதிர்கொள்ள உள்ளது. அதன் பிறகு லியோனல் மெஸ்ஸி தனது புதிய கிளப்பான இன்டர்மியாமியில் ஜூலை மாதம் சேர உள்ளார். இன்டர்மியாமியில் சேரும் முன், அவர் கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய கால்பந்து கிளப்களில் ஒன்றான பிஎஸ்ஜி அணியில் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.