
சீனாவில் நட்பு ஆட்டத்தில் விளையாடும் லியோனல் மெஸ்ஸி
செய்தி முன்னோட்டம்
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்த மாதம் பெய்ஜிங்கில் நடக்கும் நட்பு ஆட்டத்தில் விளையாட உள்ளது.
சீனாவில் உள்ள அர்ஜென்டினா தூதரகம் திங்களன்று (மே 22), 2023 பிபா உலக கோப்பை வென்ற அர்ஜென்டினா ஆஸ்திரேலியாவுடன் ஜூன் 15 அன்று விளையாடும் என அறிவித்துள்ளது.
இதன் மூலம் 2017க்கு பிறகு ஆறு ஆண்டுகள் குறித்து லியோனல் மெஸ்ஸி முதல் முறையாக சீனாவுக்கு செல்வதால், சீன ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரபல கால்பந்து அணியான பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக மாறியுள்ளது.
chinese fans support for messi
சீனாவில் லியோனல் மெஸ்ஸி விளையாடிய போட்டிகள்
சீன தேசிய கால்பந்து அணியின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்தபோதிலும், கால்பந்துக்கு சீனாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
சீனாவிற்கு மெஸ்ஸி முன்பு சென்ற ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.
2005 இல் தனது முதல் சீனப் பயணத்திலிருந்து, மெஸ்ஸி அர்ஜென்டினா அல்லது அவரது முன்னாள் கிளப் அணியான பார்சிலோனாவுக்காக நட்பு போட்டிகளில் விளையாடியுள்ளார்.
குறிப்பாக பார்சிலோனா அணி 2010ல் நடந்த நட்பு ஆட்டத்தில் பெய்ஜிங் குவானை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மெஸ்ஸி வரும் செய்தியறிந்த சீன கால்பந்து ரசிகர்கள், அவரை வரவேற்க தயாராகி வருகின்றனர்.