அடுத்த செய்திக் கட்டுரை

இன்னும் ஒரே கோல் தான் : புதிய சாதனை படைக்க தயாராகும் லியோனல் மெஸ்ஸி!
எழுதியவர்
Sekar Chinnappan
Feb 21, 2023
11:17 am
செய்தி முன்னோட்டம்
பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து அணியின் முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி, லில்லி ஓஎஸ்சிக்கு எதிரான கிளப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் 699 கோல்களை எட்டி, புதிய வரலாறு படைக்கும் விளிம்பில் உள்ளார்.
லில்லி ஓஎஸ்சி அணிக்கு எதிராக மெஸ்ஸி ஆட்டத்தின் கடைசி கோலை அடித்ததோடு, அணி வீரர்களுக்கு மூன்று கோல் அடிக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்தார்.
இன்னும் ஒரு கோல் அடிப்பதன் மூலம், மெஸ்ஸி ஐரோப்பாவின் டாப் ஐந்து லீக்குகளில் குறைந்தபட்சம் 700 கிளப் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனை சாதனை படைப்பார்.
இதற்கு முன்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
ட்விட்டர் அஞ்சல்
700 கோல் சாதனைக்கு மெஸ்ஸிக்கு ஒரு கோல் தேவை
#Messi #PSG
— Express Sports (@IExpressSports) February 21, 2023
Messi is one goal away from reaching the legendary feathttps://t.co/LTgEiCBCoM