
RR vs RCB : விராட் கோலி சதமடித்து சாதனை
செய்தி முன்னோட்டம்
நடப்பு ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன.
இந்தப் போட்டியில் அபாரமாக பேட் செய்த RCB அணியின் விராட் கோலி 113 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் 7,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி இந்தப் போட்டியில் படைத்தார்.
அதோடு, 67 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் போட்டியில் அவரது 8 வது சதத்தையும் பதிவு செய்தார்.
எனினும் விராட் கோலியின் சிறப்பான பேட்டிங், அணியின் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. இந்த போட்டியில் RCB அணி தோல்வி அடைந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
embed
விராட் கோலி சாதனை
#IPLClicks | விராட் கோலியின் புதிய சாதனை!#SunNews | #RRvRCB | #RCB | #ViratKohli𓃵 pic.twitter.com/Mg2cjhDJmr— Sun News (@sunnewstamil) April 7, 2024