Loading...
ஒரே WTC சுழற்சியில் 1,000+ ரன்கள் குவித்த 3-வது இந்திய தொடக்க வீரர்: ரோஹித் ஷர்மா பட்டியலில் இணைந்த கே.எல்.ராகுல்
ஒரே WTC சுழற்சியில் 1,000+ ரன்கள் குவித்த 3-வது இந்திய தொடக்க வீரராக கே.எல்.ராகுல் சாதனை

ஒரே WTC சுழற்சியில் 1,000+ ரன்கள் குவித்த 3-வது இந்திய தொடக்க வீரர்: ரோஹித் ஷர்மா பட்டியலில் இணைந்த கே.எல்.ராகுல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2026
07:29 am

செய்தி முன்னோட்டம்

வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் கே.எல்.ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார். சிறப்பாக விளையாடிய அவர் ஒரே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியில் 1,000-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த மூன்றாவது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய தொடக்க வீரர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர். இதன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எலைட் சாதனைப் பட்டியலில் கே.எல்.ராகுல் இணைந்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 1,000+ ரன்கள் குவித்த 5 இந்திய வீரர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே சுழற்சியில் ஆயிரம் ரன்களைக் கடந்த ஐந்தாவது இந்திய வீரராக ராகுல் உருவெடுத்துள்ளார்.

கடந்த 2019-21 சுழற்சியில் அஜிங்க்யா ரஹானே மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முதல்முறையாக இந்த சாதனையை படைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 2023-25 சுழற்சியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்தினார்.

நடப்பு 2025-27 சுழற்சியில் ஷுப்மன் கில்லுக்கு அடுத்தபடியாகக் கே.எல்.ராகுலும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

பதிலடி

நியூசிலாந்தின் 368 ரன்களுக்கு ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடியின் பதிலடி

முன்னதாக முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோரின் சதங்களால் 368 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன்கள் குவித்து வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

மறுமுனையில் நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடிய கே.எல்.ராகுல் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது 93 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்ததோடு தொடர்ந்து தனது சதத்தையும் பூர்த்தி செய்தார்.

ADVERTISEMENT

இந்திய அணியின் ஆதிக்கம்

டி20, ஒருநாள் தொடர்களைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் ஆதிக்கம்

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற உத்வேகத்துடன் இந்திய அணி டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது.

வெலிங்டன் ஆடுகளத்தில் 368 ரன்கள் போதுமானதாக இருக்கும் என நியூசிலாந்து கருதிய நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாகப் பதிலடி கொடுத்துள்ளனர்.

தொடக்க வீரர்களின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் எவ்வளவு பெரிய முன்னிலை பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT