NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் அதியா ஷெட்டியும் பெற்றோர்கள் ஆகப்போவதை அறிவித்தனர்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் அதியா ஷெட்டியும் பெற்றோர்கள் ஆகப்போவதை அறிவித்தனர்!
    கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகர் அதியா ஷெட்டி

    கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் அதியா ஷெட்டியும் பெற்றோர்கள் ஆகப்போவதை அறிவித்தனர்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 08, 2024
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகர் அதியா ஷெட்டி ஆகியோர் நவம்பர் 8 ஆம் தேதி தாங்கள் பெற்றோர்கள் ஆக போவதை பகிர்ந்து கொண்டனர்.

    இவர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டனர்.

    ஜனவரி 2023 இல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, 2025 இல் தங்கள் புதிய குடும்ப உறுப்பினரை வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

    "எங்கள் அழகான ஆசீர்வாதம் விரைவில் வரும். 2025," என்று அவர்களின் பதிவு இருந்தது. இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த இளம் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Congratulations are in order! ♥️#AthiyaShetty and #KLRahul are set to welcome their first child next year@theathiyashetty@klrahul#celebs #firstchild #couple pic.twitter.com/Am6bs0pfmM

    — Calcutta Times (@Calcutta_Times) November 8, 2024

    கிரிக்கெட்

    கிரிக்கெட்டில் ராகுலின் பயணம்

    சுவாரஸ்யமாக, 2024 ஆம் ஆண்டில் தந்தையான மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ஆவார். முன்னதாக, சர்ஃபராஸ் கானும் தான் தந்தையாக போவதை அறிவித்திருந்தார்.

    அதற்கு முன் விராட் கோலி இரண்டாவது முறையாக தந்தையானார்.

    இதற்கிடையில், ராகுல் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார். அவர் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார்.

    இம்மாத இறுதியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியிலும் அவர் ஒரு அங்கமாக உள்ளார்.

    சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணியில் ராகுலும் இடம்பெற்றிருந்தார்.

    பெங்களூருவில் நடந்த முதல் ஆட்டத்தில் மட்டும் அவர் 0 மற்றும் 12 ரன்கள் எடுத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கே.எல்.ராகுல்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    அமெரிக்காவுக்கான ஐபோன் ஏற்றுமதில் சீனாவை விஞ்சியது இந்தியா; ஏப்ரல் மாத ஏற்றுமதி 76% அதிகரிப்பு ஐபோன்
    ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள்; விரைவாக மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தகவல் ஈரான்
    ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச்சை விடுவித்தது லோக்பால் செபி
    இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் காசா தலைவர் பலி; பெஞ்சமின் நெதன்யாகு தகவல் ஹமாஸ்

    கே.எல்.ராகுல்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு
    தர்மசாலா டெஸ்ட்: இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு; கே.எல்.ராகுல் விலகல் இந்திய அணி
    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவா? குழப்பத்தை ஏற்படுத்திய கேஎல் ராகுல் இன்ஸ்டா பதிவு இந்திய கிரிக்கெட் அணி
    விராட் கோலியின் ஜெர்சி ரூ.40 லட்சத்திற்கு ஏலம்; அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி தம்பதி இந்தியா

    கிரிக்கெட்

    INDvsNZ 2வது டெஸ்ட்: முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்தார் ரவிச்சந்திரன் அஸ்வின் அஸ்வின் ரவிச்சந்திரன்
    INDvsNZ 2வது டெஸ்ட்: இந்தியாவின் 23 ஆண்டு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர்; யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்றுச் சாதனை யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    INDvsNZ 2வது டெஸ்ட்: 12 வருட சாதனையை முறியடிக்கப் போவது இந்தியாவா? நியூசிலாந்தா? டெஸ்ட் கிரிக்கெட்

    கிரிக்கெட் செய்திகள்

    சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் விராட் கோலி; தரவுகள் சொல்வது இதுதான் விராட் கோலி
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய டி20 அணி அறிவிப்பு; மூன்று அன்கேப்ட் வீரர்களுக்கு வாய்ப்பு இந்திய கிரிக்கெட் அணி
    INDvsNZ 2வது டெஸ்ட்: 359 ரன்கள் வெற்றி இலக்கு; நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு படைக்குமா இந்தியா? டெஸ்ட் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025