சிங்கப்பூர் ஓபன் 2023 : முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி! பிவி சிந்து, பிரணாய்.எச்.எஸ்., சாய்னா நேவால் தோல்வி!
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியுள்ளார். 2021 உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த், ஆடவர் ஒற்றையர் போட்டியின் தொடக்கச் சுற்றில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை 21-15 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அவர் தனது அடுத்த போட்டியில் சீன தைபேயின் சியா ஹாவ் லீயை எதிர்கொள்கிறார். இரட்டையர் ஜோடியான எம்.ஆர்.அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா ஆகியோர் தங்களது தொடக்க ஆட்டத்தில் 21-16 21-15 என்ற கணக்கில் பிரான்சின் லூகாஸ் கார்வி மற்றும் ரோனன் லாபரை வீழ்த்தி ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர். எனினும் பிவி சிந்து, பிரணாய்.எச்.எஸ். மற்றும் சாய்னா நேவால் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர்.