Page Loader
நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி
நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி

நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 13, 2023
01:05 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவின் ஆலப்புழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 69வது நேரு டிராபி படகுப் போட்டி சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்றது. இதில் பள்ளத்துருத்தி படகு குழாமின் வீயபுரம் சுண்டனில் (பாம்பு படகு) அணி வெற்றி பெற்றது. நேரு டிராபி படகுப் போட்டியில் அவர்கள் பெறும் நான்காவது தொடர் வெற்றி இதுவாகும். முன்னதாக, பாம்புப் படகுப் போட்டியின் இறுதிப் போட்டியில் யுபிசி கைனகரியின் நடுபாகம் சுண்டன், குமரகம் படகுக் கழகத்தின் சம்பக்குளம் சுண்டன் மற்றும் காவல்துறை படகுக் கழகத்தின் மகாதேவிக்காடு காட்டில் தெக்கேதில் சுண்டன் ஆகிய நான்கு அணிகள் மோதின. இந்த போட்டி ஆலப்புழாவின் புகழ்பெற்ற புன்னமடை ஏரியில் நடைபெற்றது.

nehru trophy boat race background

நேரு டிராபி படகுப் போட்டியின் வரலாறு

1952 ஆம் ஆண்டு கேரளாவிற்கு முதன்முறையாக சென்ற இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவாக இந்த பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. அவரது முதல் பயணத்தின்போது, ஆலப்புழா மக்களால் அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது மற்றும் அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் அவரது வருகையை முன்னிட்டு நடைபெற்ற பாம்பு படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி நேரு ஒரு வெள்ளிக் கோப்பையை வழங்கினார். அதன் பின்னர், இது நேரு கோப்பையாகவே மாறிவிட்டது. இந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளில் படகுப் போட்டிநடத்தப்பட்டாலும், 100 அடிக்கு மேல் நீளம் கொண்ட சுந்தன் வல்லம் எனும் பாம்பு படகுகள் தான் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.