NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சவூதி புரோ லீக்கின் அல் இத்தாட் அணியில் கரீம் பென்சிமா? 2 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சவூதி புரோ லீக்கின் அல் இத்தாட் அணியில் கரீம் பென்சிமா? 2 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்!
    சவூதி புரோ லீக்கின் அல் இத்தாட் அணியில் கரீம் பென்சிமா

    சவூதி புரோ லீக்கின் அல் இத்தாட் அணியில் கரீம் பென்சிமா? 2 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 05, 2023
    08:03 pm

    செய்தி முன்னோட்டம்

    ரியல் மாட்ரிட்டில் இருந்து வெளியேறிய கரீம் பென்சிமா, சவூதி புரோ லீக்கின் அல் இத்தாட் நிறுவனத்துடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அல் இத்தாட் சவூதியின் இந்த ஆண்டுக்கான புரோ லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாகும் மற்றும் அல் நாசருக்காக விளையாடும் முன்னாள் ரியல் மாட்ரிட் அணியின் சக வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பென்சிமா எதிர்கொள்வார்.

    ரியல் மாட்ரிட் தனது ஒப்பந்தத்தில் ஓராண்டு நீட்டிப்பு விதியை செயல்படுத்தாததால், பென்சிமா லா லிகாவில் தனது 14 ஆண்டு கால ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    அல் இத்தாட் உடன் பென்சிமா ஏற்கனவே ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவது மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    karem benzema numbers in europe leagues

    ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகளில் கரீம் பென்சிமாவின் செயல்திறன்

    பென்சிமா ரியல் மாட்ரிட் கால்பந்து அணியுடன் நான்கு லா லிகா பட்டங்களையும், ஐந்து சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்றுள்ளார்.

    2021-22 யுசிஎல் சீசனின் போது, வியத்தகு முறையில் கோப்பையைக் கைப்பற்றி, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

    இது தவிர மூன்று கோபா டெல் ரேஸ், மூன்று சூப்பர்கோபா டி எஸ்பானா பட்டங்கள், நான்கு சூப்பர் கோப்பை பட்டங்கள் மற்றும் ஐந்து பிபா கிளப் உலகக் கோப்பைகளையும் வென்றார்.

    2021-22 சீசனில் அவர் தனது உச்சத்தை அடைந்தார். 2022 பலோன் டி'ஓர் விருதையும் வென்றார்.

    ரியல் மாட்ரிட்டின் ஆல் டைம் ஸ்கோர் பட்டியலில் 350 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    செவ்வாயன்று (ஜூன் 7) மாட்ரிட்டில் அவர் பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பை வழங்க உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சவூதி புரோ லீக்
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்

    சமீபத்திய

    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்
    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை

    சவூதி புரோ லீக்

    சவூதி புரோ லீக்கில் விளையாடுவதற்காக ரியல் மாட்ரிட்டில் இருந்து விலகும் பிரபல வீரர்! ரியல் மாட்ரிட்

    கால்பந்து

    800 கோல்களை அடித்த உலகின் இரண்டாவது கால்பந்து வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை விளையாட்டு
    பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் : கைலியன் எம்பாபே புதிய சாதனை விளையாட்டு
    ஏப்ரல் 25 முதல் மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் தொடக்கம் : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு விளையாட்டு
    மரடோனோ, பீலே வரிசையில் இணைந்த லியோனல் மெஸ்ஸி விளையாட்டு

    கால்பந்து செய்திகள்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம் கால்பந்து
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு கால்பந்து
    2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம் உலக கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025