Page Loader
ஜூனியர் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி வெற்றி
ஜூனியர் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி வெற்றி

ஜூனியர் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 05, 2023
07:02 pm

செய்தி முன்னோட்டம்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையின் குழுநிலை தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை தோற்கடித்தது. இந்தியா சார்பில் ஆரைஜீத் சிங் ஹண்டால் போட்டியின் 11, 16 மற்றும் 41வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் கோல்களை பதிவு செய்தார். மேலும், 30வது நிமிடத்தில் அமந்தீப் இந்தியாவுக்காக மற்றொரு கோலை அடித்த நிலையில், தென்கொரியா சார்பில் டோஹ்யுன் லிம் மற்றும் மின்க்வோன் கிம் கோல் அடித்தனர். இந்திய ஹாக்கி அணி தனது குழுவில் இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்த்து விளையாடுகிறது. இந்தியா இடம் பெற்றுள்ள குழு சி'யில் இந்தியாவுடன், தென்கொரியா, ஸ்பெயின் மற்றும் கனடா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வெற்றி