
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: பும்ரா முதலிடம் பிடித்து புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் ஜஸ்ப்ரித் பும்ரா. ஒரே நேரத்தில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் நம்பர்-1 இடத்தைப்பிடித்த முதல் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.
சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்து இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டை அவர் கைப்பற்றியதை அடுத்து இந்த பெருமையை பெற்றுள்ளார்.
இதேபோல, ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் அஸ்வின் ரவிச்சந்திரன் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பும்ரா அவரை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்துள்ளார்.
இதே இங்கிலாந்திற்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்சில், அஸ்வின் எந்தவொரு விக்கெட்டையும் எடுக்காததால், அவர் மூன்றாமிடத்திற்கு சரிந்துள்ளார்.
இதே பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா இரண்டாமிடத்தில் உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
பும்ரா முதலிடம்
Well done #Bumrah https://t.co/hSWn72KNuW
— Sangeeta Maharaj 🇹🇹 (@CindyMaraj) February 7, 2024