Loading...
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20யிலிருந்து இஷான் கிஷன் விலகல்; வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓபனிங் வாய்ப்பு
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20-யிலிருந்து இஷான் கிஷன் விலகல்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20யிலிருந்து இஷான் கிஷன் விலகல்; வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓபனிங் வாய்ப்பு

எழுதியவர் Vasuki
Oct 26, 2026
03:48 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச டி20 போட்டியில் இருந்து இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் காயம் காரணமாக விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் டி20 போட்டியின் போது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில், அவர் இன்னும் முழு உடற்தகுதியைப் பெறாததால், அக்டோபர் 27 அன்று வெல்லிங்டனில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட குமார் குஷாக்ரா தொடர்ந்து அணியில் நீடிப்பார் என்றும் பிசிசிஐ மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

3-வது இடம்

திணறிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி

இரண்டாவது போட்டியில் இஷான் கிஷனுக்கு பதிலாகக் களமிறங்கிய இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, 3-வது வரிசையில் களமிறக்கப்பட்டு 8 பந்துகளில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

தனது அறிமுகக் காலம் தொட்டே தொடக்க ஆட்டக்காரராக மட்டுமே விளையாடிப் பழகிய சூர்யவன்ஷியை மிடில் ஆர்டரில் களமிறக்கியது தவறான முடிவு என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இதனால் 3-வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங் வரிசை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தொடக்க வீரர்

அஸ்வின், முரளி கார்த்திக் பரிந்துரை

இது குறித்துப் பேசியுள்ள மூத்த வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன், "வைபவ் சூர்யவன்ஷி 3-வது இடத்தில் களமிறங்கிய போது தண்ணீருக்கு வெளியே தத்தளிக்கும் மீனைப் போலக் காணப்பட்டார்".

"ஆறாவது ஓவரில் களமிறங்கி ஆடுவது அவரது இயல்புக்கு ஒத்துவராத ஒன்று" எனக் கூறியுள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக், அணியில் சூர்யவன்ஷிக்கு இடம் வழங்கப்பட்டால் அவரைத் தொடக்க வீரராகவே களமிறக்க வேண்டும் என்றும், அனுபவமிக்க சஞ்சு சாம்சனை 3-வது வரிசைக்கு மாற்றுவதே சரியான முடிவாக இருக்கும் என்றும் அணி நிர்வாகத்திற்கு யோசனை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT