
பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கான் கிரிக்கெட் வீரருடன் நடனமாடி கொண்டாடிய இர்பான் பதான்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 போட்டியில் பாகிஸ்தானை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெறுவது வரலாற்றில் இது முதல் முறையாகும்.
இந்நிலையில், இந்த வரலாற்று வெற்றியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் களத்தில் இறங்கி, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுடன் இணைந்து நடனமாடி கொண்டாடினார்.
இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, ஐசிசியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த ஒருநாள் போட்டியில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்காக ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் இர்பான் பதானின் வீடியோ
@IrfanPathan dancing with @rashidkhan_19 after their iconic win against Pakistan🔥👏#AFGvsPAK #ICCCricketWorldCup #CWC23INDIA #ODIWorldCup pic.twitter.com/x00guPaq74
— Cricket Enthusiast (@tarunreddyoo7) October 24, 2023