Page Loader
மூன்றாவது போட்டியிலும் வெற்றி! அயர்லாந்து ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்!
அயர்லாந்து ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்

மூன்றாவது போட்டியிலும் வெற்றி! அயர்லாந்து ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்!

எழுதியவர் Sekar Chinnappan
May 15, 2023
01:19 pm

செய்தி முன்னோட்டம்

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் அதிகபட்சமாக 69 ரன்களும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியதன் மூலம் அயர்லாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹசன் மஹ்மூத் வீசிய கடைசி ஓவரில் மூன்று பந்துகளுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 269-9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், வங்கதேசம் இரண்டு மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post