Page Loader
இரானி கோப்பை 2023 : யஜஷ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா
யஜஷ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா

இரானி கோப்பை 2023 : யஜஷ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Mar 01, 2023
06:25 pm

செய்தி முன்னோட்டம்

குவாலியரில் புதன்கிழமையன்று (மார்ச் 1) தொடங்கிய மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக இரட்டை சதம் அடித்தார். 230 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டிய ஜெய்ஸ்வால், இரானி கோப்பையில் இந்த சாதனையை எட்டிய 10வது பேட்டர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான மயங்க் அகர்வால் வெறும் 2 ரன்களில் அவுட்டான நிலையில் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிமன்யு ஈஸ்வரன், ஜெய்ஸ்வால் நங்கூரமிட்டு நின்றனர். அபிமன்யு தனது எட்டாவது சதத்தை பதிவுசெய்து 154 ரன்களில் அவுட்டானார். முதல் நாள் முடிவில் 3 விக்கெட் 381 ரன்களுடன் ரெஸ்ட் ஆஃப் இந்தியா வலுவுடன் உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

யஜஷ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம்