
ஐபிஎல் 2024 ஏலம் நடைபெறும் நேரம் மற்றும் நேரலை விபரம்
செய்தி முன்னோட்டம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 17வது சீசன்) 2024 ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் 17வது சீசனுக்கு 333 கிரிக்கெட் வீரர்களை இறுதி ஏலத்தில் பங்கேற்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 333 வீரர்களில் 214 பேர் இந்தியர்கள் ஆவர். எஞ்சிய 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். இந்த வீரர்களில் இருந்து 70 பேரை அணிகள் தேர்வு செய்ய உள்ளன.
வீரர்கள் ₹2 கோடி, ₹1.5 கோடி, ₹1 கோடியே, ₹75 லட்சம், ₹50 லட்சம், ₹40 லட்சம், ₹30 லட்சம் மற்றும் ₹20 லட்சம் ஆகிய அடிப்படை விலைகளில் பட்டியலிடப்பட்டு உள்ளனர்.
IPL 2024 Auction Live Streaming details
ஏலம் நேரலை ஒளிபரப்பு
ஐபிஎல் 2024 ஏலம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் என பிசிசிஐ முன்னர் அறிவித்திருந்த நிலையில், அது தற்போது பிற்பகல் 1 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஏல செயல்முறையை இந்தியாவில் இருந்து ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரடியாக பார்க்கலாம்.
மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் டிவி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.