
2026 ஐபிஎல்லில் எம்எஸ் தோனி விளையாடுவாரா இல்லையா? வதந்திகளுக்கு மறைமுக பதிவு மூலம் சிஎஸ்கே விளக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. ஏலத்தில் கலந்துகொள்ளும் அணிகள் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைவர் எம்எஸ் தோனியின் அடுத்த ஐபிஎல் பங்கேற்பு குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளன. கால் முழங்கால் காயம் இருந்தபோதிலும், தனது உடல் ஒத்துழைக்கும் வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று தோனி மீண்டும் மீண்டும் கூறியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால், தோனி தொடர்பான வதந்திகள் சமூக வலைதளங்களில் சூறாவளியாகச் சுழன்று வருகின்றன.
வதந்திகள்
வதந்திகளுக்கு சிஎஸ்கே விளக்கம்
இந்த வதந்திகளை மறைமுகமாக மறுக்கும் விதமாக, சிஎஸ்கே நிர்வாகம் எக்ஸ் தளத்தில் நகைச்சுவையான ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் "கவலைப்படாதீர்கள், நாங்கள் எங்கள் பயோவை புதுப்பித்துவிட்டோம்" என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிஎஸ்கேவின் பயோ பகுதியில், "இங்கே பார்க்கும் வரை எதுவும் அதிகாரப்பூர்வமானது அல்ல" என்று மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பதிவு, ரசிகர்கள் ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கும் நோக்கில் உள்ளது. இதற்கிடையில், சிஎஸ்கே நிர்வாகம் ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக தீபக் ஹூடா, விஜய் சங்கர், சாம் கரன் மற்றும் டெவோன் கான்வே உள்ளிட்ட ஐந்து வீரர்களை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாககே கூறப்படுகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வை அறிவித்ததால், அணி ஏற்கனவே ₹9.75 கோடி கையிருப்புடன் உள்ளது.