
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 230 ரன்கள் குவித்தது.
முன்னதாக, அகமதாபாத் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு களமிறங்கியது.
இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 34 ரன்களும், டெவோன் கான்வே 52 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர்.
சிவம் துபே 17 ரன்களில் அவுட்டானாலும், உர்வில் படேல் 37 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.
டெவால்ட் ப்ரீவிஸ்
டெவால்ட் ப்ரீவிஸ் அரைசதம்
அதன் பின்னர் களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸ் 19 பந்துகளில் அரைசதம் எட்டி, ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டாவது அதிவேக அரைசதம் அடித்த அஜிங்க்யா ரஹானே மற்றும் மொயீன் அலியின் சாதனையை சமன் செய்தார்.
இந்த பட்டியலில் 16 பந்துகளில் அரைசதம் எட்டி சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெவால்ட் ப்ரீவிஸ் மொத்தமாக 23 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார்.
ரவீந்திர ஜடேஜாவும் தன் பங்கிற்கு 21 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.