
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸின் டாப் 2 கனவுக்கு வேட்டு வைத்த சிஎஸ்கே; குவாலிபயர் 1 வாய்ப்பு எந்த அணிக்கு கிடைக்கும்?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 67வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 83 ரன்கள் குஜராத் டைட்டன்ஸை (ஜிடி) வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வே மற்றும் டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் அடித்தனர்.
இதன் மூலம், சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் சேர்த்தது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் இது சிஎஸ்கேவின் ஐந்தாவது டாப் ஸ்கோராகும்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் பிரஷித் கிருஷ்ணா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தோல்வி
குஜராத் டைட்டன்ஸ் தோல்வி
231 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் மட்டுமே அதிகபட்சமான 41 ரன்கள் எடுத்த நிலையில், மற்றவர்கள் சொதப்பினர்.
இதனால், 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. சிஎஸ்கே அணியில் சிறப்பாக பந்துவீசிய நூர் அகமது மற்றும் அன்சுல் காம்போஜ் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்நிலையில், இந்த தோல்வியால் குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்று முடிவில் டாப் 2 இடங்களில் முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
டாப் 2
டாப் 2 இடங்களில் சிக்கல்
டாப் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடுவதோடு, தோற்றாலும் மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் வென்றிருந்தால் குஜராத் டைட்டன்ஸ் இதை உறுதி செய்திருக்கலாம் எனும் நிலையில் அதை நழுவ விட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய நிலைப்படி அடுத்து நடக்க உள்ள பிபிகேஎஸ்vsஎம்ஐ வெற்றி பெறும் அணி குவாலிபயர் 1க்கு தகுதி பெறும்.
ஆர்சிபி எல்எஸ்ஜியை வீழ்த்தினால், ஆர்சிபி தகுதி பெறும், இல்லையெனில் ஜிடி தகுதி பெறும்.
அதே நேரம், பிபிகேஎஸ்vsஎம்ஐ முடிவில்லாமல் முடிந்தால், ஜிடி அணி தகுதி பெறும். ஆர்சிபி எல்எஸ்ஜியை வீழ்த்தினால் ஆர்சிபியும், இல்லையெனில் பிபிகேஎஸ் அணியும் தகுதி பெறும்.