IPL 2024 : செயல்படாத ப்ரித்வி ஷாவை அணியிலேயே தக்கவைக்க டெல்லி கேப்பிடல்ஸ் முடிவு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2024க்கான ஏலம் டிசம்பரில் நடைபெற உள்ள நிலையில், அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் (நவம்பர் 26) முடிவடைகிறது.
இந்நிலையில், முந்தைய சீசனில் சர்ச்சைக்கு உள்ளான இளம் வீரர் ப்ரித்வி ஷாவை அணியிலேயே வைத்துக் கொள்ள டெல்லி கேப்பிடல்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 2023 சீசனில் எட்டு போட்டிகளில் 106 ரன்களை மட்டுமே எடுத்தார். மேலும் சீசனின் நடுவில் அவர் கைவிடப்பட்டார் மற்றும் செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கால் விமர்சிக்கப்பட்டார்.
ஆனாலும் அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் அவரை அணியிலேயே தக்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
KKR plans to release shardul thakur
ஷர்துல் தாக்கூரை விடுவிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் திட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது பர்ஸில் 10.75 கோடி ரூபாயை வெளியிட உள்ளது. மேலும், ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரையும் விடுவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
2023 சீசனில், ஷர்துல் தனது அணிக்காக 11 போட்டிகளில் பங்கேற்று, 113 ரன்கள் மற்றும் ஏழு விக்கெட்டுகளை எடுத்தார்.
இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஷர்துலின் பயன்பாடு குறைந்துள்ளதோடு, அவரது பேட்டிங் மற்றும் பவுலிங் திறனும் குறைந்துள்ளதால் அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளது.
ஷர்துலை விடுவித்தால் மொத்த பர்ஸ் 15.75 கோடியாக இருக்கும்.
இதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியாவை கொண்டுவரும் முயற்சியும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.