DC vs CSK: MSD ஹெலிகாப்டர் ஷாட் அடித்தும், CSK அதிர்ச்சி தோல்வி
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில், நேற்று சிஎஸ்கே அணியும் டிசி அணியும் மோதிக்கொண்டன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்த தொடரில் இதுவரை களமிறங்காத தோனியும், இந்தப் போட்டியின் கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்ய இறங்கினார். அவருடைய பிரத்தேயேக பாணி ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி, 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இருப்பினும் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது. CSK அணியின் கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.
மட்டையை சுழற்றிய தோனி; இருப்பினும் தோல்வியடைந்த சிஎஸ்கே
சிஎஸ்கே அணியின் வீரர்கள் வரிசையாக வெளியேற, எம் எஸ் தோனி களத்தில் இறங்கினார். இந்த சீசனில் அவர் முதல் முறையாக பேட்டிங்கில் இறங்கியதால், அரங்கம் எங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆரவாரத்துடன் முதல் பந்தை எதிர்கொண்ட கேப்டன் கூல், முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். தோனி, 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி. நடப்பு ஐபிஎல் சீசனில் இது டெல்லி அணியின் முதல் வெற்றியாகும்.