Page Loader
இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார் ஷிவம்

இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே

எழுதியவர் Venkatalakshmi V
Mar 27, 2024
08:18 am

செய்தி முன்னோட்டம்

2024 ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்றது. சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்த போது, ஷிவம் துபேவின் அரைசதம், அணியை 206/6 என்ற இலக்கை நிர்ணயிக்க உதவியது. அதனால், இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார் ஷிவம். ரச்சின் ரவீந்திரா பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி 20 பந்துகளில் 46 ரன்களை குவித்ததால் சிஎஸ்கே சிறப்பான தொடக்கத்தை பெற்றது. அவருடன் ருதுராஜ் கெய்க்வாட்டும், 46 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல், குஜராத் டைட்டன்ஸ் அணி 143/8 ரன்களுக்கே சுருண்டது.

ஜிடியின் துரத்தல் 

ஜிடியின் மோசமான ஆட்டம்

பவர்பிளே ஓவரில் விருத்திமான் சாஹா (21), ஷுப்மான் கில் (8) ஆகியோரை தீபக் சாஹர் தனது அபார பந்துவீச்சில் ஆட்டமிழக்க வைக்க குஜராத் டைட்டன்ஸ் மோசமான தொடக்கத்தைத் தந்தது. பின்னர் டேவிட் மில்லருடன்(21), 41 ரன்கள் சேர்த்த நிலையில் சாய் சுதர்சன் (38) சற்று களத்தில் நின்றார். இருப்பினும், டைட்டன்ஸ் அணி தொடர்ந்து சில விக்கெட்டுகளை இழந்ததால், அவர்கள் ஆட்டமிழந்தனர். இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக தேர்வான சிஎஸ்கே அணியின் சிவம் துபே, 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். அவர் 29.77 சராசரியில் 1,191 ஐபிஎல் ரன்களை எட்டியுள்ளார். இது அவரது ஏழாவது ஐபிஎல் அரைசதம் மற்றும் சிஎஸ்கே அணியில் இது ஆறாவது சதமாகும்.