ஐபிஎல் 2023 : மீண்டும் ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி
ஐபிஎல் 2023 தொடரின் 27வது போட்டியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 20) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், அவருக்கு பதிலாக சாம் கர்ரன் இந்த போட்டியிலும் கேப்டனாக செயல்பட உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸிற்கு காயம் ஏற்பட்டு இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட உள்ளார். எனினும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பேட்டிங் செய்யும்போது இம்பாக்ட் பிளேயராக டு பிளெஸ்ஸிஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாடும் 11 வீரர்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ் பஞ்சாப் கிங்ஸ் : அதர்வா டைடே, மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்