உம்ரான் மாலிக்கை நீக்கியது குறித்த மார்க்ரமின் சர்ச்சை கருத்து! முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி கருத்து!
செய்தி முன்னோட்டம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி, விளையாடும் லெவன் அணியில் உம்ரான் மாலிக் இல்லாதது குறித்த கேப்டன் ஐடன் மார்க்ரமின் வினோதமான அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
விளையாடும் 11 வீரர்கள் தேர்வு குறித்து வெளியில் அதிகம் பேச விரும்பாதது ஒரு காரணமாக இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் 2023 சீசனில் திறமையான வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை கையாண்ட விதம் குறித்து எஸ்ஆர்ச் அணி நிர்வாகம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
உம்ரான் மாலிக் ஐபிஎல் 2023 இல் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். கடைசியாக ஏப்ரல் 29 அன்று டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடினார்.
tom moody speaks about umran malik drop
உம்ரான் மாலிக் குறித்த டாம் மூடியின் கருத்து
உம்ரான் மாலிக் குறித்து வியாழன் அன்று பேசிய ஐடன் மார்க்ரம், உம்ரான் மாலிக் அணியில் இடம் பெறுவதற்கான எக்ஸ்-காரணியை கொண்டிருந்தாலும், ஏன் அவர் அணியில் இடம் பெறவில்லை என்று தெரியவில்லை என்று கூறினார்.
இது ரசிகர்களிடையேயும் கடும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி, "வீரர்கள் தேர்வில் மார்க்ரமின் ஈடுபாடு குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.
சில அணிகளில் வீரர் தேர்வை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மட்டுமே செய்தாலும், சில அணிகளில் வேறு பலரது தலையீடும் இருக்கின்றன.
அதனால் அங்கு நடப்பது என்ன என்பது நமக்கு தெரியவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.