ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த கால புள்ளிவிபரங்கள்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 இன் 17வது ஆட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 12) எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ராஜஸ்தான் ராயல்ஸை (ஆர்ஆர்) எதிர்கொள்கிறது.
இரு அணிகளும் தங்களது கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றதால் இரு அணிகளிலும் உற்சாகம் அதிகமாக உள்ளது.
ஐபிஎல்லில் இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே 15 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஆர்ஆர் 11 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
கடைசியாக இரு அணிகளும் மோதிய போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் 23 பந்துகளில் 40* ரன்கள் எடுத்து 150 ரன்களை சேஸ் செய்து ஆர்ஆர் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
CSK vs RR Top performing players
இரு அணிகளிலும் முக்கிய செயல்திறன் மிக்க வீரர்கள்
எம்எஸ் தோனி ஆர்ஆருக்கு எதிராக 26 போட்டிகளில் 40.07 சராசரியில் 521 ரன்கள் எடுத்துள்ளார்.
ஜடேஜா 21.77 சராசரியில் 18 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்து, 94.50 சராசரியில் 189 ரன்கள் குவித்துள்ளார்.
ஜோஸ் பட்லர் கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருந்தார். இந்த சீசனில் அவர் மூன்று போட்டிகளில் 152 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார்.
டிரென்ட் போல்ட் 2020 முதல் ஐபிஎல் முதல் ஓவரில் மொத்தம் 19 விக்கெட்டுகளை பதிவு செய்துள்ளார். இது எந்த ஒரு பந்து வீச்சாளரின் அதிகபட்சமாகும்.
யுஸ்வேந்திர சாஹல் இந்த சீசனில் மூன்று போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.