எஸ்ஆர்எச் vs எல்எஸ்ஜி புள்ளிவிபரம்! போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!
ஐபிஎல் 2023 தொடரின் 58வது போட்டியில் சனிக்கிழமை (மே 13) மாலை 3.30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி ஐந்து வெற்றியையும், ஐந்து தோல்விகளையும் பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மறுபுறம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் ஆறு தோல்விகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளுமே பிளேஆப் வாய்ப்பை உறுதி செய்ய இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகள் மைல்ஸ்டோனை எட்டுவாரா நடராஜன்?
நடராஜன் இன்னும் 4 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் இன்னும் ஒரு விக்கெட்டையும் எடுத்தால் ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகள் எனும் மைல்ஸ்டோனை எட்டுவார்கள். தீபக் ஹூடா இன்னும் 14 ரன்களை எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எனும் மைல்ஸ்டோனை எட்டுவார். குயின்டன் டி காக் இன்னும் இந்த போட்டியில் 41 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்கள் எனும் மைல்ஸ்டோனை எட்டுவார். மார்கஸ் ஸ்டோனிஸ் இன்னும் 5 சிக்சர்களை அடுத்தாற் டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள் எனும் மைல்ஸ்டோனையும், 8 பவுண்டரிகளை எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 400 பவுண்டரிகள் எனும் மைல்ஸ்டோனையும் எட்டுவார்.