
டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரம்
செய்தி முன்னோட்டம்
திங்கட்கிழமை (ஏப்ரல் 24) ஐபிஎல் 2023 தொடரின் 34வது போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2023 தொடரில் எஸ்ஆர்எச் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று மிகவும் பின்தங்கியுள்ளது.
அதே சமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஐந்து தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு, டிசி தனது கடைசி போட்டியில் கேகேஆர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றுள்ளது.
இரு அணிகளும் ஐபிஎல்லில் இதுவரை 21 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், எஸ்ஆர்எச் 11 போட்டிகளிலும், டிசி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்தது.
SRH vs DC Expected Playing 11
எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்.
டெல்லி கேப்பிடல்ஸ் : டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.
இம்பாக்ட் பிளேயர் : அப்துல் சமத் (எஸ்ஆர்எச்) மற்றும் பிருத்வி ஷா (டிசி).