டேவிட் வார்னர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்
கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 53வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் கேப்டன் ஷிகர் தவான் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். இந்த போட்டியில் 182 ரன்கள் இலக்கை எட்ட போராடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. எனினும் ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஐபிஎல்லில் தனது 50வது அரைசதத்தை பதிவு செய்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரும் அடங்கும்.
50 ஐபிஎல் அரை சதங்கள் அடித்த மூன்றாவது வீரர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான அரைசதம் மூலம் ஐபிஎல்லில் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலிக்கு பிறகு 50 அரைசதங்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். ஷிகர் தவான் நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும் இரண்டு சதங்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தவான் ஐபிஎல்லில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் 6,593 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் 7,043 ரன்களுடன் கோலி முதலிடத்தில் உள்ளார். வார்னர் 6,211 ரன்களும், ரோஹித் ஷர்மா 6,063 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தவான் 214 முறை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.