NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல்லில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் : ஹர்ஷல் படேல் சாதனை
    ஐபிஎல்லில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் : ஹர்ஷல் படேல் சாதனை
    1/2
    விளையாட்டு 0 நிமிட வாசிப்பு

    ஐபிஎல்லில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் : ஹர்ஷல் படேல் சாதனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 11, 2023
    12:48 pm
    ஐபிஎல்லில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் : ஹர்ஷல் படேல் சாதனை
    ஐபிஎல்லில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்த ஹர்ஷல் படேல்

    எல்எஸ்ஜிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஐபிஎல்லில் தனது 100வது விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் மார்க் வுட்டை அவுட்டாக்கியபோது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். மேலும் ஐபிஎல்லில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஹர்ஷல் தனது முதல் ஓவரில் 17 ரன்களை விட்டுக்கொடுத்ததால், அவரது தொடக்கம் மிக மோசமானதாக இருந்தது. பின்னர் நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் படோனிக்கு எதிராக மேலும் 18 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஹர்ஷல் மூன்றாவது ஓவரில் ஒன்பது ரன்கள் விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் மார்க் வுட் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் இந்த போட்டியில் ஆர்சிபி தோல்வியையே தழுவியது.

    2/2

    ஐபிஎல்லில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்

    70 ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி லசித் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக புவனேஷ்வர் குமார் 81 போட்டிகளில் இந்த விக்கெட்டுகளை எட்டி இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், ஹர்ஷலும் 81 போட்டிகளில் மைல்கல்லை எட்டி புவனேஷ்வர் குமாரின் சாதனையை சமன் செய்தார். இன்னிங்ஸைப் பொறுத்தவரை, ஹர்ஷல் 79 இன்னிங்ஸ்களில் மிக வேகமாக இந்த மைல்கல்லை எட்டிய இந்திய வீரர் ஆனார். ஹர்ஷல் தற்போது 81 ஐபிஎல் போட்டிகளில் 23.23 சராசரியில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 69 போட்டிகளில் 22.12 சராசரியில் 89 விக்கெட்டுகளுடன் ஆர்சிபிக்காக அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் ஆனார். இதில் யுஸ்வேந்திர சாஹல் 139 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஐபிஎல்

    ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக அரைசதம் : நிக்கோலஸ் பூரன் சாதனை ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீசுவதாக அறிவிப்பு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2024இல் பங்கேற்பதாக அறிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இன்று மோதல் ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    தூய்மை பணியாளர் To கிரிக்கெட் வீரர் : ரிங்கு சிங்கின் வியக்க வைக்கும் பின்னணி கிரிக்கெட்
    எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த அஜின்கியா ரஹானே கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : ஜடேஜாவை சமாளிப்பாரா சூர்யகுமார் யாதவ்! ஒரு ஒப்பீடு! கிரிக்கெட்
    10 நாள் ரெஸ்ட்? சிஎஸ்கே அணிக்கு ஷாக் கொடுக்கும் பென் ஸ்டோக்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்

    கிரிக்கெட்

    வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக அலவன்ஸ் தொகையை உயர்த்திய பிசிசிஐ பிசிசிஐ
    இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் தொடங்க போகுது! அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ! பிசிசிஐ
    2011 ஒருநாள் உலகக்கோப்பை வெற்றி நினைவுச் சின்னம் : வான்கடே மைதானத்தில் திறந்து வைத்தார் எம்.எஸ்.தோனி எம்எஸ் தோனி
    அல்லு அர்ஜுனுக்கு "புஷ்பா"ஸ்டைலில் வாழ்த்து கூறிய ஆஸி. வீரர் டேவிட் வார்னர் கிரிக்கெட் செய்திகள்

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வெற்றி! தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து! டி20 கிரிக்கெட்
    கவுண்டி கிரிக்கெட்டில் சதமடித்த சேதேஷ்வர் புஜாரா கிரிக்கெட்
    மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஐபிஎல் 2023 : ரீஸ் டோப்லிக்கு பதிலாக வெய்ன் பார்னெலை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்! ஆதிக்கத்தை தொடருமா ஆர்சிபி? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணியிலிருந்து ரஜத் படிதார் நீக்கம் ஐபிஎல் 2023
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023