Page Loader
ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் தொப்பிகளின் தற்போதைய நிலவரம்
ஐபிஎல் 2023 புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் தொப்பிகளின் தற்போதைய நிலவரம்

ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் தொப்பிகளின் தற்போதைய நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
May 08, 2023
02:43 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (மே 7) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் பந்தில் அப்துல் சமத் ஒரு சிக்சர் அடிக்க, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நிகர ரன் ரேட்டில் டெல்லி கேபிடல்ஸை விட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிகமுள்ளதால் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியது. ராஜாதான் ராயல்ஸ் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் நீடித்தது. அந்த அணி கடைசி கடைசி மூன்று ஆட்டங்களில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

orange cap purple cap holders

ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் தொப்பிகள் யார் வசம்?

ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் நிகர ரன் ரேட் அடிப்படையில் முறையே 4,5,6 மற்றும் 7வது இடங்களில் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. அதிக ரன் அடுத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் வசம் உள்ளது. ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் இதுவரை இதுவரை 10 போட்டிகளில் 511 ரன்கள் குவித்துள்ளார். பர்ப்பிள் தொப்பியை பொறுத்தவரை, குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் முகமது ஷமி 19 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.