நாயிடம் கடிவாங்கிய அர்ஜுன் டெண்டுல்கர்! வைரலாகும் வீடியோ!
ஐபிஎல் 2023 இல் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் செவ்வாய்க்கிழமை (மே 16) மோதுகிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு போட்டிக்கு முன்னதாக ஒரு கெட்ட செய்தியாக, பிரபல கிரிக்கெட் வீரர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை நாய் கடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றில், அர்ஜுன் யுத்விர் சிங்கை சந்தித்தபோது, மே 13 ஆம் தேதி தன்னை நாய் கடித்ததாக அர்ஜுன் கூறுவது பதிவாகியுள்ளது. நாய் கடியால் அர்ஜுன் நெட்டில் கூட பந்து வீச முடியவில்லை.
வாய்ப்பு கிடைத்தும் சரியாக செயல்படாத அர்ஜுன் டெண்டுல்கர்
குறிப்பிடத்தக்க வகையில், நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் 2023 இன் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானார். அவர் நான்கு போட்டிகளில் விளையாடிய பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அந்த நான்கு ஆட்டங்களில் 9.35 என்ற எகானாமியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அர்ஜுன் டெண்டுல்கர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 31 விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்ததற்காக கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் சிறந்த பந்துவீச்சாளராக மாற தனது பந்துவீச்சு நடவடிக்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பல நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.