18ஆம் எண்ணுடன் தொடரும் பிரபஞ்ச பிணைப்பு! மே 18இல் 3வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல்லில் தனது ஆறாவது சதத்தை வியாழக்கிழமை (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) பேட்டர் விராட் கோலி தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம் ஐபிஎல்லில் அதிக சதங்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்தார்.
முன்னதாக, இந்த போட்டி தொடங்கும் முன் தனது 18ஆம் எண் ஜெர்சிக்கும் தனக்கும் உள்ள பிரபஞ்ச பிணைப்பு குறித்து விராட் கோலி பேசியிருந்தார்.
18ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடி வரும் கோலி, இந்திய அணிக்காக அறிமுகமானதும் 18ஆம் தேதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோலி ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார்.
kohli secures 3 man of the match award
ஐபிஎல்லில் மே 18க்கும் விராட் கோலிக்கும் உள்ள தொடர்பு
ஐபிஎல் வரலாற்றில் மே 18 ஆம் தேதி விராட் கோலி ஆட்டநாயகன் விருது வெல்வது இது மூன்றாவது முறையாகும்.
இதற்கு முன்பு 2013 மற்றும் 2016 இல் இதே மே 18 ஆம் தேதி நடந்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.
மே 18, 2013: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் கோலி 193.10 ஸ்ட்ரைக் ரேட்டில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
மே 18, 2016: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் கோலி 226 ஸ்ட்ரைக் ரேட்டில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.