Page Loader
INDvsNZ Semifinal Umpires : இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதி போட்டிக்கான நடுவர்கள் பட்டியல்
இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதி போட்டிக்கான நடுவர்கள் பட்டியல்

INDvsNZ Semifinal Umpires : இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதி போட்டிக்கான நடுவர்கள் பட்டியல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2023
05:13 pm

செய்தி முன்னோட்டம்

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் நவம்பர் 15 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி மோதலின் போது ஆஸ்திரேலியர் ராட் டக்கர், இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் போட்டியின் கள நடுவர்களாக செயல்பட உள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடுவர் ராட் டக்கருக்கு இது நடுவராக பணியாற்றும் 100வது போட்டியாகும். ராட் டக்கர் 2019 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டியின்போது மூன்றாவது நடுவராக பணியாற்றியவர் ஆவார். மேலும், இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் அந்த போட்டியின் கள நடுவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

AUS vs SA ODI World Cup Semi Final Umpires

ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா அரையிறுதி போட்டியின் நடுவர்கள்

நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான கள நடுவர்களாக ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றும் நிதின் மேனன் செயல்பட உள்ளனர். இதில், ரிச்சர்ட் கெட்டில்பரோ சமீபத்தில் நடுவராக தனது 100வது போட்டியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் கெட்டில்பரோ 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதியில் கள நடுவராக பணியாற்றியவர் ஆவார். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் போட்டியின் போட்டி நடுவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் செயல்பட உள்ளார்.